Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுக்கடை அமைக்க தற்காலிக உரிமம் பெற வேண்டும்

தஞ்சாவூர், ஆக.27: இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்; தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசுக்கடை அமைத்திட விரும்புவோர் வெடிபொருட்கள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள் 2008ன் படி தற்காலிக உரிமம் பெறவேண்டும்.

மேலும், உரிமம் பெற விரும்புவோர் கட்டடத்திற்கான வரைபடம், கடை அமைந்துள்ள இடத்தின் சட்டபூர்வ உரிமைக்கான ஆவணங்கள், முகவரிக்கான சான்று, அரசுக்கணக்கில் ரூ.500/- செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றிற்கான நகல்களையும், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் இணைத்து, இணையவழியில் (https://tnedistrict.tn.gov.in) 20.09.2025க்குள் விண்ணப்பித்திட வேண்டும். அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.