திருக்காட்டுப்பள்ளி, ஆக.27: பூதலூரில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடத்தில் இருந்து கூட்டி குடிநீர் திட்டத்தின் மூலம் பெரிய குழாய்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்நிலையில், பூதலூர் பழைய யூனியன் அலுவலகம் அருகில் செல்லும் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பல நாட்களாக வீணாக சாலையில் ஓடுகிறது.
இந்த தண்ணீரால் தொற்று நோய்கள் ஏற்படுவதுடன், சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,255 பள்ளிகளில் பயிலும் 61,020 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.