தஞ்சாவூர், நவ.22: இது குறித்து உதவி செயற்பொறியாளர் விஜய்ஆனந்த் கூறுகையில்:தஞ்சாவூர் நகர் பொது மக்கள் நலன் கருதி, மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை மேற்பார்வை பொறியாளர் சித்ரா தலைமையில், தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டம் நீதிமன்ற சாலை தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே, தஞ்சாவூர் நகர கோட்டத்திற்கு உட்பட்ட நகர் எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரத்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீலம் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய ஹவுசிங் யூனிட், காந்திஜி ரோடு, மருத்துவகல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரஹ்மான் நகர்.
ரெட்டிபாளையம் சாலை, சிங்கபெருமாள் குளம், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ் பல்கலைகழக வளாகம் குடியிகுப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பேருந்து நிலையம், திருவேங்கட நகள், இனரத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


