திருக்காட்டுப்பள்ளி, நவ.22: திருக்காட்டுப்பள்ளி அருகே மன்னார் சமுத்திரம் ஊராட்சியில் 2024-25 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வட்டார வள பயிற்றுனர் ராம்குமார், பணி மேற்பார்வையாளர் ரமேஷ், ஊராட்சி செயலர் ரவி மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் 100 நாள் சம்மந்தமான சமூக பணி வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறபட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, 2024-2025 தணிக்கை உறையினை என்.எம்.ஆர் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும், எத்தனை பயனாளிகள் நூறு நாள் வேலை செய்துள்ளனர். எவ்வளவு தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. எந்தெந்த பணிகளுக்காக மனித சக்தி பயன்படுத்தப்பட்டது. எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது.
மக்கள்தொகை அதிகம் உள்ளதால் பகுதிவாரியாக பணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஓவர்சீயர் ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிலம்புச் செல்வன், வசந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.


