திருக்காட்டுப்பள்ளி, நவ.22: தஞ்சாவூர் மாவட்டம் தச்சன்குறிச்சி கிராமத்திற்கு பேருந்து சேவையை திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்லும் மகளிர் நலன் கருதி, தஞ்சாவூர்-2 கிளை நகர் பேருந்து தடம் எண்.V74Y தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சானிடோரியம் வரை தினசரி இயக்கப்படும் 4 நடைகளை, தச்சன்குறிச்சி வரை தட நீட்டிப்பு செய்து இயக்கப்படும் பேருந்து சேவையை செங்கிப்பட்டியிலிருந்து திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டல துணை மேலாளர் (வணிகம்) தங்கபாண்டியன், தஞ்சாவூர்-2 கிளை மேலாளர் சந்தானராஜ் சுசியன், முருகானந்தம், அசோக்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


