தஞ்சாவூர், ஆக.22: பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகதீசன் தலைமை வகித்து மரக்கன்று நட்டு வைத்தார். இதில், 2025ம் ஆண்டு பொதுத் தேர்வில் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கஜலட்சுமி, கார்த்திகா, கவுன்சிலர் பாலகிருஷ்ணன், கல்வியாளர் செங்குட்டுவன், ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன், தமிழ் ஆசிரியர் ராதா, உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.