திருக்காட்டுப்பள்ளி, நவ.21: திருக்காட்டுப்பள்ளி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு ஆண்டு பொருப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருக்காட்டுப்பள்ளி ரெட்கிராஸ் சொசைட்டி பூதலூர் துணைகிளையின் 2025-28ம் ஆண்டிற்கான பொருப்பாளர்கள் தேர்தல் தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேர்தல் அலுவலர் தஞ்சை ராமதாசு, வட்டக் கிளை துணைத்தலைவர் பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சேர்மனாக மருதையன் தேர்வு செய்யப்பட்டார். உதவி சேர்மனாக விஜயன், பொருளாளராக பாவா(எ) தன்ராஜ் ஆகியோரை மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்வு செய்தனர். இம்மூன்று பொருப்பாளர்களும் சேர்ந்து, செயலாளராக கருணாகரனையும், துணை செயலாளராக ஏசுராஜாவையும், பிஆர்ஓவாக சந்திரனையும் தேர்ந்தெடுத்தனர். தொடர்ந்து மாவட்ட, மாநில, பிரதிநிதியாக திரவியசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


