திருவையாறு, ஆக.20: திருவையாறு அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி அரசு தொடக்கப்பள்ளியில் தேவேந்திர குல வேளாளர் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சார்பில், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி சுத்தமான குடிநீர் வழங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு கருவியை பள்ளி தலைமையாசிரியர் மணிமொழியிடம் வழங்கினர்.
அதனை தொடர்ந்து 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.10,500 கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. மேலும், குரூப் 2, குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று அரசுப்பணி பெற்றவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்க்பபட்டது.