திருவையாறு, செப்.19: திருவையாறில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் இரண்டு நாள் தமிழிசை விழா கல்லூரி மாணவர்கள் மங்கல இசையுடன் தொடங்கியது. கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன் வரவேற்றார். தஞ்சாவூர் மாவட்ட ஆர்டிஒ நித்யா தலைமை வகித்தார். எம்.பி.முரசொலி, திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். நகராட்சி துணைத் தலைவர் நாகராஜன், தமிழிசை மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், நகராட்சி கவுன்சிலர் ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் நகராட்சி ஆணையர் மதன்ராஜ், திமுக ஒன்றிய செயலாளர் சிவசங்கரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இசை விழாவில் காசிம், பாபு ஆகியோரின் நாதஸ்வர, தவிலிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளை இசைக்கல்லூரி தவில்பேராசிரியர் ராதாகிருஷ்ணன், நாதஸ்வரபேராசிரியர் கல்யாணபுரம் சீனிவாசன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.