பட்டுக்கோட்டை, நவ. 18: பட்டுக்கோட்டை பள்ளியில் வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் எஸ்ஐஆர் சிறப்பு திருத்த முகாம் 2 நாட்கள் நடந்தது. முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான கணக்கீட்டுப் படிவங்களை சேகரித்து பிஎல்ஓ மொபைல் அப்ளிகேஷனில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர், நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியாசெந்தில் குமார், நகராட்சி ஆணையர் கனிராஜ், தாசில்தார் தர்மேந்திரா உள்பட மற்றும் பலர் உடனிருந்தனர்.


