திருவையாறு, அக்.18: திருவையாறு அரசர் கல்லூரியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விரிவான அறிவை மேம்படுத்திடவும் இளம் பருவ ஆரோக்கியம் மன ஆரோக்கியம் மற்றும் போதை தடுப்பு தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் செந்தில்நாதன் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு, போதை தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை வழங்கி பேசினார். கல்லூரி மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் மற்றும் போதை தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சமூக பணித்துறை உதவி பேராசிரியர் விமலா வரவேற்றார், உதவி பேராசிரியர் திவாகர்நன்றி கூறினார்.


