கும்பகோணம், செப். 18: கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி முதன்மை நிதி அலுவலர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்சியில் பொதுமேலாளர்கள் முத்துக்குமாரசாமி (கும்பகோணம்), ராஜேந்திரன் (நாகப்பட்டினம்), துணை மேலாளர்கள் ரெங்கராஜன், மலர்கண்ணன், ரவி, உதவி மேலாளர்கள் இளங்கோவன், கோபாலகிருஷ்ணன், முருகன், ஜெய்குமார், அன்புசெழியன், அல்போன்ஸாமேரி, ஜெயக்குமார், மார்கரேட்மேரி, ஓவியா, கிளை மேலாளர்கள், பொறியாளர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழிற்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
+
Advertisement