தஞ்சாவூர், ஆக.18: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரி பண்டாரவாடை அனைத்து வணிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. செயலாளர் செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சங்கம் 25 ஆண்டுகளாக ஆற்றிய சிறப்பான செயல்பாடுகளை குறித்து நிர்வாகிகள் முகம்மது கனி, அப்பாஸ், அப்துல் அஜீஸ், அமானுல்லா, முகம்மது இக்பால், முத்தமிழ்ச்செல்வன், ராமநாதன், அப்துல் காதர், ரவி, முஹம்மது யாசின், ஆவின் ராஜா ஆகியோர் உரையாற்றினர்.
கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் இனிப்பு, தேநீர் வழங்கப்பட்டன. முடிவில் பொருளாளர் சிக்கந்தர் பாட்சா நன்றியுரை ஆற்றினார். அதனை தொடர்ந்து சங்க அலுவலகத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.