திருவையாறு, அக்.17: திருவையாறு அரசு முழுநேர கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். முன்னாள் 2ம் நிலை நூலகர் காமராஜ் ஆலோசனை வழங்கி பேசினார். இதில் நூலக பணியாளர் சாந்தவதனி,போட்டி தேர்வு மாணவர்கள் தியாகராஜன், மணிகண்டன், பிரவீன்குமார், ராஜேஷ், அஸ்வின் மற்றும் வாசகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, வரும் நவம்பர் 14 அன்று தேசிய நூலக வார விழாவை சிறப்பாக கொண்டாடுவது, நூலகத்தை மேம்படுத்த புதிய நூலக உறுப்பினர் சேர்க்கை, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நூலகர் சாமிநாதன் நன்றி கூறினார்.
+
Advertisement