திருக்காட்டுப்பள்ளி, அக்.17: திருக்காட்டுப்பள்ளி-செங்கிப்பட்டி சாலையில் பூதலூரில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதில், நாள்தோறும் இருசக்கர வாகனம், பஸ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து தஞ்சை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு கனரக வாகனங்களும் சென்று வருகின்றன.
இந்நிலையில், தற்போது பருவமழை பெய்ய ஆரம்பித்து விட்டதால், இந்த உயர் மட்டப்பாலத்தின் மேல்பகுதியில் மழைநீர் தேங்கி பல்வேறு இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இப்படியே மழைநீர் தேங்கியிருந்தால் பாலத்தில் ஏற்ப்பட்டுள்ள விரிசல்கள் வழியாக தண்ணீர் சென்று பாலம் சேதமடைந்து வலுவிழக்கும் ஆபத்து உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.எனவே, போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.