ஒரத்தநாடு, செப்.17: ஒரத்தநாடு பேரூராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு திமுக சார்பில் ரெயின் கோட் வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் 500க்கும் மேற்பட்ட கலந்து கொண்ட பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு, ஒரத்தநாடு நகர திமுக சார்பில் பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த கனடாவில் பணியாற்றி வரும் கருணாநிதியின் நிதி பங்களிப்பில், நகர செயலாளர் கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமையில் 45 தூய்மை பணியாளர்களுக்கு மழை காலங்களில் தொய்வின்றி பணியாற்றிட ரூ.27 ஆயிரம் மதிப்பிலான ரெயின் கோட் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒரத்தநாடு ஒன்றிய, நகர கிளைக செயலாளர்கள், மகளிர் அணி செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், முன்னாள் இன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.