திருக்காட்டுப்பள்ளி, செப்.17: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே முத்தாண்டிபட்டியில் மின் மோட்டாரில் இருந்து செப்பு கம்பியை திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர். முத்தாண்டிபட்டியை சேர்ந்தவர் விக்டர்அமலநாதன் மகன் ஜோசப் ஜஸ்டின்(33). இவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த மின்மோட்டாரில் இருந்து ரூ.3ஆயிரம் மதிப்புள்ள செப்புக் கம்பியை விழுப்புரம் மாவட்டம் அரசம்பட்டு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆகாஷ் (19) என்பவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜோசப் ஜஸ்டின் கொடுத்த புகாரின் பேரில் பூதலூர் போலீசார் ஆகாஷ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
+
Advertisement