பட்டுக்கோட்டை, ஆக.14: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த சூரப்பள்ளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்பதை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. சூரப்பள்ளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சூரப்பள்ளம் விஜயகுமார் கலந்து கொண்டார். அப்போது பள்ளியில் பயிலக்கூடிய அனைத்து மாணவர்களுடன் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் விஜயகுமார் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.
+
Advertisement