திருக்காட்டுப்பள்ளி, ஆக.14: திருச்சி தாராநல்லூர் வசந்த் நகரை சேர்ந்தவர் பெரிய தம்பி மகன் ராஜமாணிக்கம் (76). இவரை கடந்த 6 ஆம் தேதி முதல் காணவில்லை என்று கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை பூதலூர் காவல் சரகம் இந்தளூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள வெண்ணாற்று கரையில் ராஜமாணிக்கத்தின் சடலம் கரை ஒதுங்கியது.
இது குறித்து தகவல் அறிந்து ராஜமாணிக்கத்தின் மகன் சங்கர் பூதலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்று போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.