தஞ்சாவூர், நவ. 12: தஞ்சாவூர் மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம் நேற்று தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் வரவேற்புரை ஆற்றினார். தலைவர் பழனிவேல் தலைமை உரையாற்றினார். பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
பொருளாளர் சுப்பிரமணியன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். இதில் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், பாலகிருஷ்ணன், அமைப்புச்செயலாளர் குருநாதன், இணைச்செயலாளர் திருமலை ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் அன்புச்சோலை மையம் திறந்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
