திருவையாறு, நவ.12: திருவையாறு மண்டப படித்துறையில் குளிக்க சென்ற வாலிபர் காணவில்லை. திருவையாறு புஷ்ய மண்டப தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் இவரது மகன் சுரேஷ் (30) வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை சுமார் 11.30 மணி அளவில் திருவையாறு காவேரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும் நிலையில் புஷ்ய மண்டப படித்துறையில் குளிக்க சென்றவரை காணவில்லை. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் திருவையாறு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் காவிரியாற்றில் காணாமல் போன சுரேஷை தேடி வருகின்றனர். இது குறித்து திருவையாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement
