தஞ்சாவூர், நவ.12: இந்த ஆண்டுகான தொழிலாளர் நல நிதி பங்குத் தொகையினை தொழிலாளர் நல வாரியத்திற்கு 31.01.2026-க்குள் செலுத்த வேண்டும். தமிழ்நாடு தொழிலாளா நல நிதிச் சட்டப்பிரிவின் கீழ் வரும் தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் ஒரு ஆண்டில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளியின் பங்காக ரூ.20- மற்றும் நிறுவனத்தின் பங்காக ரூ. 40 மொத்தம் ரூ. 60வீதம் 2025ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதி பங்குத் தொகையினை 2025 டிசம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு 31.01.2026-க்குள் செலுத்த வேண்டும்.
நிறுவனங்கள் \”Iwmis.lwb.tn.gov.in என்ற இவ்வாரிய இணையதளத்தில் தங்களது நிறுவனத்தை தொழிலாளர் நல நிதி சட்டத்தின் கீழ் பதிவு செய்தும், தொழிலாளர் நல நிதியினை இணைய தள வாயிலாக செலுத்தி ரசீதினை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே < http://iwb.tn.gov.in/ >என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்களும் தற்போது செயல்பட்டு வரும் என்ற இவ்வாரிய Webportal-ல் பதிவு செய்து கொள்ளுமாறு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
