கும்பகோணம், அக். 12: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் நிறுவனம் கடந்த 121 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் 139-வது புதிய கிளை திறப்பு விழா 10ம் தேதி நடைபெற்றது. 173/3A1, திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, சானூரப்பட்டி, செங்கிப்பட்டி , தஞ்சாவூர் மாவட்டம் என்ற விலாசத்தில் உள்ள கட்டிடத்தில் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. நிதியின் தலைவர் கல்யாணசுந்தரம் எம்பி விழாவிற்கு தலைமை வகித்தார். தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி புதிய கிளையினை திறந்து வைத்தார். செல்லக்கண்ணு பாதுகாப்பு அறையை திறந்து வைத்தார். முருகானந்தம், அசோக்குமார், சரவணன், லெனின், ஸ்டாலின், நிதியின் மேலாண் இயக்குநர் வேலப்பன், இயக்குநர்கள் பிரகாசம், துரைராஜ், அம்பிகா, குருபிரசாந்த், பொதுமேலாளர் வெங்கடேசன், துணைப் பொது மேலாளர் கருணாநிதி, கம்பெனி செயலர் கண்ணன், உதவி பொது மேலாளர் முருகேசன், கிளை மேலாளர் அன்பழகன், ஊழியர்கள், பங்குதாரர்கள், வியாபாரிகள் வர்ததக சங்கத்தினர், மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement