திருவையாறு, செப்.12: திருவையாறு பேருந்து நிலையத்தில் வளரும் தமிழகம் கட்சியின் சார்பில் இமானுவேல் சேகரனின் 68வது நினைவேந்தல் நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் பிரசாத் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் இமான்சேகர், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் மனோஜ், விடுதலை சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் கதிரவன், பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய செயலாளர் சுரேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் கராத்தே மோகன், திருவையாறு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய பொறுப்பாளர்கள் கலை, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement