தஞ்சாவூர், செப்.12: தஞ்சாவூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் கனமழை பெய்தது. அதேபோல் நேற்று முன்தினம் மாலை சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, ஆலக்குடி உட்பட பல பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இந்த கனமழை சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீடித்தது. இடி மின்னலுடன் பெய்த கனமழையால் நகர் பகுதியில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.