தஞ்சாவூர், செப்.11: தஞ்சாவூர் வீரராகவ அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 100 சதவீதம் வருகை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி நிர்வாகக்குழு செயலர் தனசேகரன், மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமரன் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளி நிர்வாக குழு செயலர், ஆசிரியர்கள், மாணவர்களை நல்ல முறையில் எளிதாக அனைத்து பாடங்களையும் புரிந்து கொள்ளும் வகையில் தங்கள் வகுப்பறை சூழலை கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தினர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில் பள்ளி முதுகலை ஆசிரியை சாந்தி நன்றி தெரிவித்தார்.