கும்பகோணம், செப்.11: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம், கும்பகோணம் உட்கோட்டத்திற்குட்பட்ட ஊர்க்காவல் படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏடிஎஸ்பி அங்கித் சிங் பங்கேற்று ஆணைகளை வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்ட மண்டல தளபதி ரமேஷ்பாபு மற்றும் கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் ஆகியோர் பங்கேற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வாழ்த்தி ஊக்கமளித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனோகர், கார்த்திகேயன், பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.