தஞ்சாவூர், அக் 9: உங்களுடன் ஸ்டாலின் கும்பகோணத்தில் இன்று நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கும்பகோணத்தில் நடக்கிறது. கும்பகோணம் மாநகராட்சி வார்டு 27, 28 ஆகிய பகுதிகளில் கும்பகோணம், எ.ஆர்.ஆர்.ரோடு, லைலா மஹாலிலும், மதுக்கூர் பேரூராட்சி வார்டு 9 முதல் 15 ஆகிய பகுதிகளில் மதுக்கூர் எம்எஸ்ஏ திருமண மஹாலிலும், திருவையாறு வட்டாரம் வைத்தியநாதன்பேட்டை, புனவாசல், விளாங்குடி. முகாசா கல்யாணபுரம் ஆகிய பகுதிகளில் விளாங்குடி விஷ்ணுபிரியா திருமண மண்டபத்திலும், பாபநாசம் வட்டாரம் கோபுராஜபுரம் ஆகிய பகுதிகளில் மல்லபுரம் சமுதாய கூடத்திலும், கும்பகோணம் வட்டாரம் உமா மகேஸ்வரபுரம் பிரிதி அர்பன் ஆகிய பகுதிகளில் உமா மகேஸ்வரபுரம் கிராம பொதுசேவை மையக்கட்டிடத்திலும், தஞ்சாவூர் வட்டாரம் இனத்துக்கான்பட்டி ஆகிய பகுதிகளில் இராவுசாப்பட்டி கிராம பொது சேவை மையக் கட்டிடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. எனவே, இம்முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement