பேராவூரணி, டிச.8: சென்னையில் நடைபெற்ற பெண்களுக்கான மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பேராவூரணி அருகே உள்ள களத்தூர் ஊராட்சி சித்துக்காடு அரசுப்பள்ளி மாணவி இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சித்துக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஓவியா, சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு 2ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், சித்துக்காடு கிராமத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி ஓவியா மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களை கிராம மக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


