தஞ்சாவூர், டிச.8: நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க 9வது மாவட்ட பேரவை கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கோட்ட தலைவர் ஜெனார்த்தனன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் திரவியராஜ், மாயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு காத்திருக்கும் சாலை பணியாளர் குடும்பத்தினருக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை ஐகோர்ட்டு ஆணைப்படி பணி காலமாக அறிவிக்க வேண்டும்.
மேல் முறையீட்டை திரும்ப பெற வேண்டும். நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில செயலாளர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் ரமேஷ், வருவாய்த்துறை மாவட்ட தலைவர் பார்த்த சாரதி, கோட்ட பொறுப்பாளர்கள் சந்திரசேகர், கருணாநிதி, வட்ட செயலாளர் அஜய்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட துணை தலைவர் அய்யப்பன் நன்றி கூறினார்.


