தஞ்சாவூர், அக். 8: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அழைப்பு விடுத்துள்ளார். காந்தி ஜெயந்தி தினத்தன்று (02.10.2025) நடைபெறவிருந்த கிராம சபா கூட்டமானது நிர்வாக காரணங்களுக்காக 11.10.2025 சனிக்கிழமை அன்று காலை 11 மணியளவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது.
இக்கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனர். எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.