திருக்காட்டுப்பள்ளி, நவ.7: தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை காவிரியில் குதித்து திருச்சியை சேர்ந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் பழனிசாமி (45). இவர் சொந்தமாக ஸ்விட்ச் போர்டு தயாரிக்கும் கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
கருத்து வேறுபாடு காரணமாக தன் மனைவியை விட்டு 4 வருடங்களாக பிரிந்து இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கல்லணை காவிரி ஆற்றிற்கு வந்த அவர் திடீரென ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் தோகூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
