தஞ்சாவூர், நவ.7: தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வித்யா கூறியதாவது; தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் தங்கள் நில உடமை பதிவுகளை சரிபார்க்கும் முகாம் வேளாண்மைத்துறை, மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் அனைவரும் தங்கள் பெயரில் உள்ள நில ஆவணங்கள், ஆதார் அட்டை மற்றும் தொலைபேசி எண் போன்ற ஆவணங்களை எடுத்து சென்று பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு ஆதார் அட்டை எண் போன்ற விவசாய அடையாள எண் அட்டை வருங்காலங்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
