ஒரத்தநாடு, அக். 7: ஒரத்தநாடு அருகே உள்ள தெக்கூர் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு நெடுஞ்சாலை உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட ஒரத்தநாட்டிலிருந்து திருவோணம் செல்லும் சாலையில் கக்கரைக்கோட்டையில் பிரிந்து தெக்கூர் வழியாக செல்லம்பட்டி செல்லும் சாலை ஒரு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை ஆகும். இந்த சாலையை அகலப்படுத்த கோரி இந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இந்த சாலை தற்போது போக்குவரத்திற்கு ஏற்ற நிலையில் இல்லை என்பதால் சாலையை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.