வல்லம், அக். 7: தஞ்சாவூர் அருகே மனோஜ்பட்டி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் நபார்டு வங்கி திட்ட நிதி உதவியுடன் ரூ.49 இலட்சம் மதிப்பீட்டில் தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இரண்டு வகுப்பறை கட்ட கட்டுமானப் பணியினை மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த கட்டுமானப் பணிகள் நிறைவுற்று மாணவர்கள் பயன்பாட்டிற்கு தயார் ஆனது. இதையடுத்து சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக இந்த கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதேபோல் அகரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பில் புதிய ஆய்வக் கட்டிடமும் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.