தஞ்சாவூர், நவ.6: தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பெரியார் நகரை சேர்ந்தவர் ரெங்கராஜன் (45). இவர் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த 2 மர்மநபர்கள் ரெங்கராஜனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து ரூ.200-ஐ பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் ரெங்கராஜன் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் மகன் மணிகண்டன் (29) மற்றும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரெங்கையன் மகன் பாலகிருஷ்ணன் (30) ஆகிய இருவரும் மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.
