கும்பகோணம், ஆக. 6: கும்பகோணம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை கும்பகோணம் மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே 9 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அச்சிறுமியின் உறவினரான சுரேஷ்(45) என்பவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில். மேலும் சிறுமியை பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்துச்சென்ற மாதேஷ்(37) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதேபோல் பலசரக்கு கடைக்கு சிறுமி சென்ற போது நஜீமுதீன்(37) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் உடல் நலம் பாதித்ததால் தாயார் அவளிடம் விசாரித்த போது மூன்று பேர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததை கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்கு பதிந்து 3 பேரை கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.