ஒரத்தநாடு, நவ.5: ஒரத்தநாடு நெடுஞ்சாலைத்துறை சாலைகளின் மையத்தடுப்பு ஓரங்களில் படிந்துள்ள மண்குவியலை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திற்குட்பட்ட ஒரத்தநாடு உட்கோட்டத்தில் மாநில நெடுஞ்சாலையான திருக்காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி- பட்டுக்கோட்டை சாலையில் திருவோணம் ஊரணிபுரம் போன்ற பிரதான நகரங்கள் உள்ளன.
இப்பகுதியில், திரு வோணம் முதல் ஊரணிபுரம் வரை சாலையில் மைய தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில், சாலையோரங்கலில் உள்ள வர்த்தக நிறுவனங்களால் மைய தடுப்புகளில் குப்பை மற்றும் மண் படிந்து விபத்துக்களை ஏற்படுத்தி வந்தன. இந்நிலையில், கோட்ட பொறியாளர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி உதவி கோட்ட பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டு மைய தடுப்புகளில் மண் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
