கும்பகோணம், ஆக.5: கும்பகோணம் உட்கோட்ட காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த ஜூலை 28ம் தேதி இரவு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை காணவில்லை என கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி...
கும்பகோணம், ஆக.5: கும்பகோணம் உட்கோட்ட காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த ஜூலை 28ம் தேதி இரவு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை காணவில்லை என கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம் உத்தரவின் படி கும்பகோணம் ஏஎஸ்பி அங்கிட் சிங் மேற்பார்வையில், கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் முகில்ராஜ் மற்றும் ஏட்டுகள் சரவணன், வேளாங்கண்ணி, மனோஜ், ஜனார்த்தனன் ஆகிய போலீசார் அடங்கிய குழுவினர் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கும்பகோணம் அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (21), பிரம்மன் கோவில் ரங்கர் தெரு பகுதியை சேர்ந்த தினேஷ் (22) ஆகியோர் என்பதை அடையாளம் கண்டனர்.அதனடிப்படையில் நேற்று முன்தினம் 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அந்த இரண்டு குற்றவாளிகளையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.