தஞ்சாவூர், ஆக. 5: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் நகர நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர தலைவர் வழக்கறிஞர் இசட், முஹம்மது தம்பி தலைமை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். நகர செயலாளர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசியத்...
தஞ்சாவூர், ஆக. 5: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் நகர நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர தலைவர் வழக்கறிஞர் இசட், முஹம்மது தம்பி தலைமை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். நகர செயலாளர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசியத் தலைவர் பேராசிரியருக்கு தமிழக அரசு சார்பில் தகைசால் விருதுக்கு தேர்வு செய்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிநோம். ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்ததுவது. வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல் மற்றும் வரும் 2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சி நிறைவில் நகர துணைத் தலைவர் ஷேக் நெய்னா மரைக்காயர் நன்றி கூறினார். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.