அம்மாபேட்டை அருகே விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பெருந்திரள் பேரணி தீர்மான விளக்க பொதுக்கூட்டம்
தஞ்சாவூர், அக்.4: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உக்கடை பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்மாபேட்டை தெற்கு ஒன்றியம் சார்பில், மதசார்பின்மை காப்போம் பெருந்திரள் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் இனியவன் தலைமை தாங்கினார்.
கிளைச் செயலாளர் சஞ்சய் வரவேற்புரை ஆற்றினார். தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் தமிழன் சிறப்புரை ஆற்றினார். தஞ்சை மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன் அமைப்பாளர் தமிழ் வளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் தீர்மானம் குறித்து விளக்க உரையாற்றினர். இதில், ஏராளமான நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.