தஞ்சாவூர், அக்.4: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் தமிழரசன் வயது (34) மெக்கானிக். இவர் கடந்த 1ம் தேதி தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இரண்டு பேர் திடீரென தமிழரசனிடமிருந்து செல்போனை பறித்து அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினர். இது குறித்து தமிழரசன் தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி நடு குளத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் முத்துக்குமார் (25), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசர்குளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மகன் பேரரசு (26) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து செல்போன் பறித்த முத்துக்குமார், பேரரசு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை மீட்டனர்.