திருவையாறு, நவ.1: திருவையாறு அருகே மேலதிருப்பூந்துருத்தி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் காவிரி ஆற்றின் கரையோரங்களில் 500 பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் லால்பகதூர் சாஸ்திரி தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜான் மனோகர் உதவி திட்ட அலுவலர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலையில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பள்ளி வளாகம் மற்றும் காவேரி ஆற்றின் கரையோரங்களில் 500 பனை விதை மற்றும் 50 மரக்கன்றுகளை நட்டனர். இதில் ஆசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement
