Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தஞ்சாவூர், ஜூலை 29: தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 6 இடங்களில் இன்று நடைபெற உள்ளது என கலெக்டர் என பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கலெக்டர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஜீலை 15 முதல் நவம்பர் 15 வரை 4 கட்டங்களாக 353 முகாம்கள் நடைபெற உள்ளன. முதற்கட்டமாக ஜீலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நகர்பகுதியில் 45 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 75 முகாம்களும் என 120 முகாம்கள் நடைபெற உள்ளன. 3,13,646 வீடுகளுக்கு 802 தன்னார்வலர்களால் 15.07.2025 அன்று முதல் 14.08.2025 வரை நடைபெறும் முகாம்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் கிராமப்புறங்களில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளுக்கான மனுக்கள் பெற்று 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு எண்.16 முதல் 18 ஆகிய பகுதிகளில் தஞ்சாவூர் மேலவீதி, இராகவேந்திரா திருமண மண்டபத்திலும், பட்டுக்கோட்டை நகராட்சி வார்டு எண்.7 முதல் 9 ஆகிய பகுதிகளில் பட்டுக்கோட்டை ரோஜா மஹாலிலும், மதுக்கூர் பேரூராட்சி வார்டு எண்.1 முதல் 8 ஆகிய பகுதிகளில் மதுக்கூர் M.S.A திருமண மஹாலிலும், திருவையாறு ஊராட்சி கல்யாணபுரம் 2ம் சேத்தி, கல்யாணபுரம் 1ம் சேத்தி, உப்புகாய்ச்சிப்பேட்டை, திருச்சோற்றுத்துறை ஆகிய பகுதிகளில் கல்யாணபுரம் 1ம் சேத்தி பொன்னாவரை, கோகோஸ் மஹாலிலும், கும்பகோணம் ஊராட்சி நீரத்தநல்லூர், அத்தியூர், உத்தமதாணி,

தேவனாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தேவனாஞ்சேரி மணிமலர் திருமண மண்டபத்திலும், தஞ்சாவூர் ஊராட்சி நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளில் நாஞ்சிக்கோட்டை கிராம பொது சேவை மையக் கட்டிடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. எனவே, இம்முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.