தஞ்சாவூர், அக்.26: மருதுபாண்டியர்களின் 224வது குருபூஜையை முன்னிட்டு தஞ்சாவூர் எம்எல்ஏ அலுவலகத்தில் எம்எல்ஏ டிகேஜி நீலமேகம் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.மருதுபாண்டியர்களின் 224வது குருபூஜை விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம் தலைமையில் மருது சகோதரர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் இளங்கோவன், மாமன்ற உறுப்பினர்கள் கலையரசன், ஆனந்த், பிரதிநிதிகள் தர்மராஜன், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


