தஞ்சாவூர், ஆக.1: தஞ்சாவூர் ராஜகோரி சுடுகாட்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை ராஜகோரி சுடுகாடு முற்றிலும் சீமை கருவேல மரங்களால் மண்டி கிடக்கிறது எனவே இங்கு மண்டி கிடக்கும் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றக்கோரி அங்கு உள்ள பணியாளர்களுக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் அறிவுறுத்தினார்.
அதேபோல் அங்கு செயல்பட்டு கொண்டிருந்த கழிப்பறை ஒரு சிலரால் சேதம் அடைந்துள்ளது. எனவே சேதம் அடைந்த கழிப்பறையை மராமத்து பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் இறந்தவர்களுக்கு ஈம காரியம் செய்வதற்காக செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த செட்டானது முற்றிலும் பழுதடைந்து உள்ளதால், அதனை சரி செய்து அந்த பகுதி முழுவதும் சுற்று சுவர் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மண்டல தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.