Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தஞ்சாவூர் தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மே 21:தொழிலாளர் விரோத கொள்கைகளை கைவிட வலியுறுத்தி ஒன்றிய மோடி அரசை கண்டித்து நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சையில் நடைபெற்றது. ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட செயலாளர் சேவியர், ஏஐடியுசி மாவட்ட தலைவர் சேவை யா, சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால், ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் ராஜன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய மோடி அரசு தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும், அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26,000 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த மற்றும் சிபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9000 மாக நிர்ணயம் செய்ய வேண்டும். ஏழை எளிய உழைக்கும் மக்களை பாதிக்கின்ற விலைவாசி வியர்வை கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை யை சட்டமாக்க வேண்டும். அனைவரையும் பாதிக்கின்ற புதிய மின்சார சட்டம், புதிய மோட்டார் வாகனச் சட்டம் திரும்ப பெற வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட் , தினக்கூலி முறைகளில் ஆட்கள் நியமனம் செய்வது கைவிடப்பட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்திற்கு நிலுவையில் உள்ள நிதியை வழங்க வேண்டும். வேலை திட்டத்தின் நாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும். கட்டுமானம் கைத்தறி ஆட்டோ தையல் தெரு வியாபாரம் உள்ளிட்ட அமைப்பு சாரா வாரிங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும், குறைந்தபட்சம் ரூ.3000 ம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். காடுகளை, வனவிலங்குகளை, பழங்குடி இன மக்களை பாதிக்கும் 2023 வன பாதுகாப்பு சட்ட மசோதா திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் தொமுச நிர்வாகிகள் பாஸ்டின், எட்வின், கிருஷ்ணமூர்த்தி, முத்தையா, ஏஐடியுசி நிர்வாகிகள் துரை.மதிவாணன், கோவிந்தராஜ், முத்துக்குமரன், கருணா, சிஐடியு நிர்வாகிகள் அன்பு, பேர்நீதி ஆழ்வார், இடிஎஸ். மூர்த்தி, சாய்சித்ரா, ஐஎன்டியுசி நிர்வாகிகள் ரவி, பாரதிதாசன், முத்துக்குமாரசாமி, சங்கர், ஏஐசிசிடியு நிர்வாகிகள் ரமேஷ்,ஜெயபால், மாரியப்பன், எச்எம்எஸ் தலைவர் சின்னப்பன், நிர்வாகிகள் செல்வராஜ், ராஜா,யுடியுசி செயலாளர் ராஜாராம், நிர்வாகி கனகராஜ் அனைத்து ஆட்டோ சங்க நிர்வாகிகள் தொமுச சிவா, ஏஐடியுசி செந்தில்நாதன், சிஐடியு ஜோசப், ஐஎன்டியுசி பாரதிதாசன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி லெட்சுமணன், தொழிலாளர் விடுதலை முன்னணி ஆட்டோ சங்க தமிழ்முதல்வன், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க மாரிமுத்து, உரிமைக்குரல் சங்க பொதுச்செயலாளர் சிங்காரம், மகஇக இராவணன், மக்கள் அதிகாரம் தேவா, விசிக தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்டு அரசு ஊழியர் ஆசிரியர் இன்சூரன்ஸ் இபி சத்துணவு அங்கன்வாடி உடல் உழைப்பு கட்டுமான சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.