Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குறுவைத் தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு பாராளுமன்ற வேட்பாளர்கள் வருகிற 1ம் தேதி தேர்தல் செலவின கணக்குகள் தாக்கல்

தஞ்சாவூர், ஜூன் 29: தஞ்சாவூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவின கணக்கு விபரங்களை வருகிற ஜூலை 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதால் இறுதி செய்யப்பட்டு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கிய தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது முழுமையான தேர்தல் செலவின கணக்கு விபரங்களை 01.07.2024 அன்று காலை 10 மணியளவில் தேர்தல் செலவின மேற்பார்வையாளர் முன்னிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதள அறை எண் 1-ல் தாக்கல் செய்ய உள்ளனர்.

வேட்பாளர் வாரியாக மேற்கொள்ளப்பட்ட தேர்தல் செலவினக் கணக்கு விபரங்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்ற விபரம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.