Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கும்பகோணத்தில் ஓரணியில் தமிழ்நாடு பேரணி எம்எல்ஏ துவக்கி வைத்தார்

கும்பகோணம், ஜூலை 24: கும்பகோணத்தில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு பேரணியை எம்எல்ஏ துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நான்காண்டு சாதனை விளக்க கையேடுகளை வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகர திமுக சார்பில் பாலக்கரையில் உள்ள குழந்தைகள் நினைவு பூங்கா அருகே ஓரணியில் தமிழ்நாடு பேரணி மாநகர செயலாளரும், துணை மேயருமான சு.ப.தமிழழகன் தலைமையில் நடைபெற்றது.

இதனை தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான சாக்கோட்டை அன்பழகன் பிரச்சார பேரணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் அரசின் நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு என்ற சாதனை விளக்க புத்தகத்தை பொதுமக்களுக்கு வழங்கி, அவர்களிடம் விளக்கி பேசி, குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ரமேஷ் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் அசோக்குமார், ராஜேந்திரன், மாநகர நிர்வாகிகள் வாசுதேவன், ரவிச்சந்திரன், சிவானந்தம், செந்தாமரை, பகுதி கழக செயலாளர்கள் செல்வராஜ், கல்யாணசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, மண்டல குழு தலைவர் ஆசைத்தம்பி, வட்ட செயலாளர்கள் திருமலை, ராஜேஷ்கண்ணா, சிவசங்கர், கோபி, தகவல் தொழிற்நுட்ப அணி நிர்வாகிகள் காளிதாஸ், சிவா, மணிகண்டன், நடராஜன், சதீஷ்குமார், தாஜுதீன், நிர்மல், காதர் ஹூசைன், மகளிரணியினர், பிடிஏ நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.