Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவையாறில் இன்று ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ முகாம் கலெக்டர், அலுவலர்கள் பங்கேற்பு

திருவையாறு, ஜூன் 18: மக்களை நாடி குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம் தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி ஒவ்வொரு கலெக்டரும் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை ஒரு நாள் முழுவதும் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்ற மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதனடிப்படையில் இன்று புதன்கிழமை திருவையாறு வட்டத்தில் தஞ்சாவூர் கலெக்டர் தலைமையில் அனைத்துறை அலுவலர் கள் முகாம் மேற்கொண்டு இன்று காலை முதல் கள ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் திருவையாறு சகாயமாதா திருமண மண்டபத்தில் கலெக்டர் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி பொது மக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை மற்றும் நிள அளவை தொடர்பான அனைத்து விதமான கோரி க்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு திருவையாறு தாசில்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.